
அரசியலுக்குள் வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் தயங்கிய காலம் மலையேறிவிட்டதாகவும் அடுத்து சிங்கம் போல அவர் சிங்கிளாக அரசிலுக்கு நுழையப் போகிறார் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதையே நடிகர் ரஜினிகாந்த் தனது லட்சியமான கொண்டுள்ளார் என தெரிவித்தார்.
தமிழக மக்களுக்காக அவர் குரல் கொடுக்க வில்லை என கூறக்கூடாது எனவும், 1996 ஆம் ஆண்டு தமிழக மக்களை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் கூறியதால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
கழகங்கள் இல்லாத தமிழகம்..களங்கம் இல்லாத தமிழகம் இதுதான் ரஜினிகாந்த்தின் எண்ணம் என்றும் கூறினார்.
ரஜினிகாந்த் விரைவில் அரசிலுக்கு வருவார் என்றும்,தனிக்கட்சி தொங்குவார் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். நதிநீர் இணைப்பில் மிகுந்த ஆர்வம் உள்ள ரஜினிகாந்த், இதற்காகவாவது அரசியலுக்கு அவர வேண்டும் என கூறிய அர்ஜுன் சம்பத், நாங்கள் அவருக்கு என்றும் துணை நிற்போம் என்றும் கூறினார்.
கடந்த சில மாதங்களாக ரஜினி அரசியல் பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வருவது வாடிக்கையாகியுள்ளது. ஆனாலும் தன் அரசியல் பிரவேசம்பற்றி ரஜினி தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்.இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.