எடப்பாடி பதவி விலக கோரி அவையில் கடும் அமளி - திமுக வெளிநடப்பு!!

 
Published : Jun 19, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
எடப்பாடி பதவி விலக கோரி அவையில் கடும் அமளி - திமுக வெளிநடப்பு!!

சுருக்கம்

dmk left from TN assembly

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனையில் திமுக சார்பில் தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டவர முயன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

சென்னை ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் அந்த ஆவணங்களை அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தனர்,

இதையடுத்து எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து தமிழக சட்டப் பேரவையில் திமுக சார்பில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டார்.

ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்காததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சபாநாயகருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதல்வர் எடப்பாடி பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பியபடி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு