கட்சி தலைவரின் தலையை எடுத்த குற்றவாளியை கொஞ்சி குலாவும் திமுக.. கூட்டணி தொடருமா காங்கிரஸ்? அலறவிடும் பாஜக.!

By vinoth kumarFirst Published May 19, 2022, 10:29 AM IST
Highlights

வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணை உள்ள எந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் ராஜூவ் காந்தி குற்றவாளியின் விடுதலையை  கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர விரும்ப மாட்டார்கள். ஆனால், மானங்கெட்ட காங்கிரசே!

கட்சி தலைவரை கொன்ற குற்றவாளியை கொஞ்சி குலாவும் கட்சியின் தயவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுமா காங்கிரஸ்? பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி என கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்ததி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை நேற்று விடுதலை செய்யப்பட்டார். 161-வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 142-வது சட்டப்பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்தது. இவர் விடுதலையை மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக அரசியல் கட்சி தலைவர் கூறியுள்ளனர். 

இதனையடுத்து, முதல்வரை சந்திப்பதற்காக பேரறிவாளன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சென்னை வந்தனர்.  கோவையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல்வரை அங்கேயே அவர்களை சந்தித்தனர். அப்போது, பேரறிவாளனை பார்த்ததும் முதல்வர் கட்டியணைத்து கொண்டார். இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை நாடே கொண்டாடி வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து அடுத்தடுத்து டுவிட்களை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார். 

முதல் டுவீட்:- கட்சி தலைவரை கொன்ற குற்றவாளியை கொஞ்சி குலாவும் கட்சியின் தயவில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுமா காங்கிரஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

2வது டுவீட்:- வெட்கம் கெட்ட காங்கிரசாரோ ராஜூவ் காந்தியை கொன்ற குற்றவாளிகளை அரவணைக்கும் திமுகவோடு கூட்டணி தொடர்கிறீர்களா? கேவலம் அவமானம். 

3வது டுவீட்;- வெட்கம், மானம், ரோஷம், சூடு சொரணை உள்ள எந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் ராஜூவ் காந்தி குற்றவாளியின் விடுதலையை  கொண்டாடும் திமுக கூட்டணியில் தொடர விரும்ப மாட்டார்கள். ஆனால், மானங்கெட்ட காங்கிரசே!

மாநிலங்களவை பதவிக்காக  கட்சியின்  மானத்தை அடகு வைக்கலாமா? கட்சி தலைவனை கொலை செய்த குற்றவாளியின் விடுதலையை கொண்டாடும் திமுக வுடன் இன்னும் கூட்டணியா? வெட்கமே இல்லையா? என தெரிவித்துள்ளார். 

 

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டம் :

ஏன்? கட்சி தலைவரின் தலையை எடுத்த கொலை குற்றவாளியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதாலும், அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்து போய் விடும் என்பதாலும் (1/2)

— Narayanan Thirupathy (@Narayanan3)

 

4வது டுவீட்;- பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டம் : @KS_Alagiri ஏன்? கட்சி தலைவரின் தலையை எடுத்த கொலை குற்றவாளியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர்களை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதாலும், அப்படி சொல்லி விட்டால் கூட்டணி முறிந்து போய் விடும் என்பதாலும் வாயில் துணியை கட்டி கொண்டு போராட்டமா? அப்படியாவது  எம் எல் ஏ, எம்.பி. யாகி விட வேண்டுமென்று அதிகார அரசியலுக்கு அலைவது ஏன்? நாடு முழுதும் உள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு செய்யும் துரோகம் இது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

click me!