கருத்துகணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளதே.. ?? அசராமல் பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 1:05 PM IST
Highlights

ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் அத்தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது மக்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர், 

வெற்றி வாய்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக ஒரு பொய்யான மாயையை ஏற்படுத்த திமுக முயற்சி செய்வதாகவும், ஆனால் அந்த மாயை எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ராயபுரம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. குறிப்பாக அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளுமே தீவிர வாக்கு வேட்டையில்   ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் அத்தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது மக்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர், அப்போது அவர் அங்கிருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்திவாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கருத்து கணிப்பு பெரும்பாலும் திமுகவிற்கு ஆதரவாக உள்ளதே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மக்கள் பலத்தோடு அதிமுக மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்டி அமைக்கும் என்றார். மேலும், சமூக வளைதளங்களில் இது போன்ற மாயை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என திமுகவினர் நினைக்கிறார்கள், அது மாயையாகவே இருக்கும். 

ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை பலவீனாமான சுயேட்சையான வேட்பாளராகதான் நான் பார்க்கிறேன், இந்த தொகுதியில் குழந்தைகளை கேட்டால் கூட சொல்லும் அவர் 10ஆயிரம் வாக்குகள் கூட பெற மாட்டார். அம்மாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் தடை நீக்கப்பட்ட பின் மரணத்திற்கு காரணமாணவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!