சித்தி சொன்னதை கேட்டு ஒதுங்குங்கள்... டி.டி.வி.தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்..!

Published : Mar 23, 2021, 01:04 PM IST
சித்தி சொன்னதை கேட்டு ஒதுங்குங்கள்... டி.டி.வி.தினகரனுக்கு புகழேந்தி அட்வைஸ்..!

சுருக்கம்

அமமுக தேர்தலில் எப்படி வேலை செய்கிறதோ இல்லையோ  அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.   

அமமுக தேர்தலில் எப்படி வேலை செய்கிறதோ இல்லையோ  அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

சசிகலாவின் கருத்துக்கு மாறாக டி.டி.வி.தினகரன் ஆங்காங்கே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஒரு குழப்பத்தை உண்டு பண்ணுவதற்காக இருப்பவருக்கு எப்படி மக்கள் வாக்களிப்பாளர்கள்? சசிகலா சொன்னதை ஏற்று கொண்டு ஒதுங்கி போக வேண்டும். தற்போது ஆர்கே.நகரில் உள்ள ஒரு தெருவில் தினகரன் தனியாக போய் விட்டு வந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்.

ஆர்.கே.நகரில் வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால் டி.டி.வி.யால் தொகுதி பக்கமே போக முடியவில்லை. பழைய தொகுதிகளான ஆண்டிபட்டி, தேனி பக்கமும் போக முடியவில்லை. கடைசியாக கோவில்பட்டி வந்துள்ளார். கோவில்பட்டி மக்களை ஏமாற்ற முடியாது. கமல் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி அமைக்க வேண்டும் என சொல்லி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் அவரது கட்சி பொருளாளர் வீட்டில் அவ்வளவு பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை அது கமல் சம்பாதித்த பணத்தின் மீதமாக இருக்கலாம்’’ என அவர் விமசித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!