சைதாப்பேட்டையில் வெற்றிவாகை சூடப்போவது நான்தான்.. திமுகவை தெறிக்கவிடும் சைதை துரைசாமி.

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 12:51 PM IST
Highlights

இன்று ஈக்காட்டுத்தாங்கல் பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் வாக்கு சேகரித்தார் அப்போது தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:  செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பினால் மகிழ்ச்சியாகவும் இன்னும் வேகமாகவும் பிரச்சாரம் செய்ய முடிகிறது. 
 

மேயராக இருந்தபோது செய்ததை விட சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் மேலும் பல நலத்திட்டங்களை செய்வேன் என சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காணும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி சைதை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரித்து மக்களிடையே ஆங்காங்கே உரையாற்றி வரும் சைதை துரைசாமிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுக்கும் மலர் தூவியும் சால்வை அணிவித்தும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இன்று ஈக்காட்டுத்தாங்கல் பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் வாக்கு சேகரித்தார் அப்போது தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:  செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பினால் மகிழ்ச்சியாகவும் இன்னும் வேகமாகவும் பிரச்சாரம் செய்ய முடிகிறது. 
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட அம்பாள் நகர் காந்தி நகர் போன்ற பகுதிகளில் 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்கும் நிலையை நான் மேயராக இருந்தபோது மாற்றினேன். அதற்கு நன்றிக் கடனாக எனக்கு மக்கள் வாக்களிப்பதாக உறுதியளித்து இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் அதே போல சைதாப்பேட்டை மக்களின் பிரதான கோரிக்கையான கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக வெள்ள தடுப்பு சுவர் கட்டுதல் மற்றும் கூவம் ஆறு புனரமைக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அப்போது முதல்வராக இருந்த புரட்சித்தலைவி ஆணையின்படி சிங்கப்பூர் உள்ளிட்ட மேலை நாடுகளுக்குச் சென்று அங்கே அமைக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து மேலை நாடுகளுக்கு நிகராக கூவம் ஆற்றையும் புனரமைக்கும் பணியை தொடங்கியதாகவும் தெரிவித்தார். இதேபோல சைதாப்பேட்டை முழுவதும் தார் சாலைகள் அமைப்பது எல்இடி விளக்குகள் அமைத்தது போன்ற பல்வேறு திட்டங்களை தொகுதி மக்களுக்காக தான் மேயராக இருந்தபோது செய்ததாகவும், இதைவிட பலமடங்கு திட்டங்களை சைதாப் பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் செய்வேன் என்றும் தெரிவித்தார். 
 

click me!