மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா.? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2020, 2:50 PM IST
Highlights

மெட்ரோ ரயில் நிலையங்களில், 2017 ம் ஆண்டு ஆய்வு செய்த போது, அவை மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியானதாக இல்லை எனத் தெரிவித்த போதும், இதுவரை மாற்றியமைக்காததால், 

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளின்படி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்படவில்லை எனக் கூறி, மாற்றுத் திறனாளிகள் நல ஆர்வலர் வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், 2017 ம் ஆண்டு ஆய்வு செய்த போது, அவை மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியானதாக இல்லை எனத் தெரிவித்த போதும், இதுவரை மாற்றியமைக்காததால், ரயில் நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதை ஏற்ற நீதிபதிகள், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உள்ளதா என்பதை அதிகாரி ஒருவரை அனுப்பி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

click me!