ஆந்திராவில் இருந்து ஆட்டையை போட்ட திமுக... தமிழகத்தில் ஒரு அழகிகூட சிக்கவில்லையா..?

By Thiraviaraj RMFirst Published Sep 23, 2020, 2:28 PM IST
Highlights

உபீஸ்களுக்கே 200 ரூபாய் கொடுக்கும் திமுக, இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்ணின் புகைப்படத்தையும் பணம் செலவழிக்காமல் திருடி பயன்படுத்தி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

தானேவை சேர்ந்த மாயிரா என்கிற துணிக்கடை விளம்பரத்தை அப்படியே காப்பிடியத்து, திமுகவில் தனது குடும்பத்தினர் இணையாததால் 21 வயது இளம்பெண் வீட்டை விட்டு ஓடியதாக ஐ-பேக் நிறுவனம் படுகேவலமாக சித்தரித்து  வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

உயரமான அழகான 21 வயது பெண்ணை காணவில்லை. அன்பு மகளே காயத்திரி. தயவு செய்து வீட்டுக்கு வந்துவிடு. நாங்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறோம்.  உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். முதலாவது கோரிக்கையின்படி நீ விரும்பிய வேலைக்கு செல்லலாம். நாங்கள் தடுக்க மாட்டோம். இரண்டாவதாக நீ விரும்பியபடி ஆன்லைன் மூலம் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் குடும்பத்தோடு திமுகவில் இணைந்துவிட்டோம். அத்திம்பேர், மன்னி குடும்பமும் கூட இணைந்து விட்டது. 

ஆகையால் எங்கிருந்தாலும் உடனடியாக வீட்டுக்கு வரவும். இப்படிக்கு பார்த்தசாரதி  என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சமூகவளைதளத்தில் காணாமல் போனவர் பற்றிய விளம்பரத்தை உற்றுக் கவனித்தால், திமுகவில் அம்மவும், அப்பாவும் சேராததால் ஒரு இளம்பெண் வீட்டை விட்டு ஓடிப்போனதாக அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது ஒரு பிராமணப்பெண் திமுகவில் சேர்வதற்காக வீட்டை விட்டு வெளியே ஓடிப்போனதாகவும், அந்தப்பெண்ணின் கோரிக்கையை ஏற்று பெற்றோர்கள் வீட்டிற்கு வருமாறும் அந்த விளம்பரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஐபேக் நிறுவனத்தால் திமுகவுக்காக சித்தரிக்கப்பட்ட விளம்பரம்.

 

காப்பியடித்து வெளியிட்டுள்ள இந்த விளம்பரம் எந்த நாளிதழிலும் வந்ததல்ல. அது போலி என்று சில திமுகவினர் கதறுகிறார்கள். நாளிதழில் வெளியான வேறொரு தனியார் நிறுவன விளம்பரத்தை எடிட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இதிலும் கூட காப்பியடித்து இப்படியொரு கேவலமான விளம்பரத்தை வெளியிட்டு கட்சிக்கு ஆள் பிடித்து வருகிறது திமுக. சாதிய குறியீட்டுடன் வெளியாகி உள்ள இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதில் இன்னும் உச்சம் என்னவென்றால் காணாமல் போன பெண் தம்பையா சாலை, வெஸ்ட் மாம்பழம், இ-மெயில் முகவரியாக partha_exsangee@gmail.com எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது அந்தப்பெண்ணின் தந்தை முன்னாள் பாஜக கட்சிக்காரர் என சிம்பாளிக்காக கூறப்பட்டிருக்கிறது.

 

ஆனால், உபீஸ்களுக்கே 200 ரூபாய் கொடுக்கும் திமுக, இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்ணின் புகைப்படத்தையும் பணம் செலவழிக்காமல் திருடி பயன்படுத்தி உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தப்பெண் ஆந்திராவை சேர்ந்தவர். சேலை விற்பனைக்கு மாடலாக அவர் கொடுத்த புகைப்படத்தை எடுத்து திமுக விளம்பரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். திமுக கட்சியோட விளம்பரம் கொடுக்கக் கூட தன்னோட சொந்த மாநிலமான ஆந்திராவிலிருந்துதான் மாடல்... என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!