சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணியா? பொருளாளர் வெற்றிவேல் பரபரப்பு தகவல்..!

Published : Sep 23, 2020, 02:22 PM IST
சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணியா?  பொருளாளர் வெற்றிவேல் பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். 

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறியுள்ளார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விடுதலை ஆனவுடன் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என தெரிகிறது. மேலும், சசிசலா வெளியே வந்ததும் அதிமுகவிலிருந்து எத்தனை பேர் அவர் பக்கம் சாய்வர். அதிமுகவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்  தினகரனின் அமமுக கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்பதற்கானப் பணிகளைத் தொடங்குவார். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி வைப்பது குறித்து சசிகலா, தினகரன் முடிவெடுப்பார்கள். தினகரன் டெல்லி சென்று யாரை சந்தித்தார் என்பது குறித்து எனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!