கெஜ்ரிவாலுக்கு எதிராக மே 20ல் விசாரணை தொடக்கம்…டெல்லி நீதிமன்றத்தில் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு

Asianet News Tamil  
Published : Mar 25, 2017, 09:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
கெஜ்ரிவாலுக்கு எதிராக மே 20ல் விசாரணை தொடக்கம்…டெல்லி நீதிமன்றத்தில் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு

சுருக்கம்

Arawind jejriwal

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் 6 பேர் அடுத்தமாதம் 20-ந்தேதி விசாரணை ஆஜராக நீதிமன்றம் ேநற்று நோட்டீஸ் அனுப்பியது. 

அவதூறு

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அமைப்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2013ம் ஆண்டு வரை தலைவராக இருந்தபோது ஏராளமான ஊழல் நடந்தன என்று கடந்த ஆண்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஜெட்லி, அவரின் குடும்பத்தினர் மீதும்அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.

ரூ.10 கோடிகேட்டு வழக்கு

இந்த குற்றச்சாட்டை மறுத்த அருண்ெஜட்லி, டெல்லி  நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால், அசுடோஷ், குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோருக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், ஜெட்லியின்சொத்துப்பட்டியல், வங்கிக்கணக்கு ஆகியவற்றை அளிக்க முதல்வர் கெஜ்ரிவால்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

நேரில் ஆஜர்

நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெட்லி தரப்பு வழக்கறிஞர்களும், முதல்வர் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். நீதிமன்றத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால், அசுடோஷ், குமார்விஸ்வாஸ், சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோர் வந்திருந்தனர்.

இருதரப்பு வழக்கறிஞர்களும் கடுமையாக வாதிட்டு, ஒருவொருக்கு  ஒருவர் மிரட்டல் விடுத்துக்கொண்டனர். நீதிமன்றத்தில் அமைச்சர் ஜெட்லிஆஜராகவில்லை என்பதால், இதை ஒத்திவைக்க கோரி கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர். இதனால், பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வெளியேற்றம்

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்த நீதிபதி சுமித்தாஸ், வழக்கு தொடர்பாக அறையில் அமர்ந்திருக்கும் அனைவரையும் வெளியே அனுப்ப உத்தரவிட்டார்.

மே 20

அதன்பின், ஐ.பி.சி. 500பிரிவின்படி, கெஜ்ரிவால், உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அவதூறு வழக்கு விசாரணை தொடங்குவதற்கான நோட்டீஸை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற விசாரணையை தவிர்க்க நினைத்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அடுத்த மாதம் 20-ந்தேதி விசாரணை முறைப்படி தொடங்குவது  கடுமையான பின்னடைவாகும்.

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!