அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவை உயர்த்தியுள்ளார் மோடி.. எஸ்.எம்.கிருஷ்ணா அதிரடி ..

Asianet News Tamil  
Published : Mar 25, 2017, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவை உயர்த்தியுள்ளார் மோடி.. எஸ்.எம்.கிருஷ்ணா அதிரடி ..

சுருக்கம்

S.M.Krishna speech

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு  புதிய அந்தஸ்தை தந்துள்ளார் என்றும் அதனால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா உயர்ந்துள்ளது என்றும்
 

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.கிருஷ்ணா சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருப்பதாகவும், மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, எஸ்.எம்.கிருஷ்ணா  பாஜக வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 22-ம் தேதி பாஜக  தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரது முன்னிலையில் பா.ஜ.க.வில் முறைப்படி இணைந்தார்.


இந்நிலையில் பெங்களூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா , பிரதமர் மோடி இந்தியாவிற்கு புதிய அந்தஸ்தை தந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனால், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா உயந்துள்ளது  என்றும் தான் வெளியுறவு அமைச்சராக  பதவி வகித்த போது இந்தியாவின் எந்த கேள்விகளும் பாகிஸ்தானுக்கு புரியாத நிலையில் இருந்தது என தெரிவித்தார்.

ஆனால் , மோடி பாகிஸ்தானுக்கு  புரியும் விதமாக ’சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ மூலம் சரியான பதிலளித்தார்” என பாராட்டுக் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!