அப்பாவு கட்டபஞ்சாயத்து ராஜாவா.. ஓபிஎஸ் போல பந்திக்கு முந்த மாட்டோம்.. தாறுமாறா நக்கல் அடித்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2022, 1:34 PM IST
Highlights

சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும் ஏதோ கட்டப்பஞ்சாயத்து ராஜாவைப் போல செயல்படக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 

சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும் ஏதோ கட்டப்பஞ்சாயத்து ராஜாவைப் போல செயல்படக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். ஓபிஎஸ்சை எதிர்க்கட்சித் துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் என அழைக்கப்படுவார் இல்லை என்றால் மான்பில்லா சபாநாயகர் என்றுதான் அழைக்கப்படுவார் என்றும் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஆளுநருக்கு போட்டியாக துணைவேந்தர் மாநாடு..! திடீரென ஒத்திவைத்த முதலமைச்சர்.. என்ன காரணம் தெரியுமா..?

பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின்  இடைக்கால பொதுச் செயலாளராகவும் அவர் இருந்து வருகிறார். இதானல் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது, இந்நிலையில் ஓபிஎஸ்சை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்பில் சபாநாயகருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலு இதுவரை சபாநாயகர் அம்மனு மீது முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்

இந்நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார் சபாநாயகரை எச்சரிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அண்ணா தொழிற்சங்க உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவோம் என அதிமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இன்று வரையிலும் அதை நிறைவேற்றவில்லை, செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது.

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய வில்லை ஆனால் அந்த நிலைக்கு அரசு தள்ளி விட வேண்டாம், அதிமுகவினர் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுகிறார், தேவை இல்லாத விஷயங்களில் சபாநாயகர் அப்பாவு தலையிட வேண்டாம், அப்பாவு தன் வேலையை மட்டும் பார்க்க வேண்டும், கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்படக்கூடாது. ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் அந்த மனுவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர் என அழைக்கப்படுவார் இல்லை என்றால்  மான் பில்லா சபாநாயகர் என்றுதான் அழைக்கப்படுவார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்கப்படவேண்டும். அப்படித்தான் ஓபிஎஸ்சை பார்க்க வேண்டும் ஓபிஎஸ்சிடம் 80 சதவிகிதம் தொண்டர்கள் இல்லை என்றும் வெறும் 80 தொண்டர் மட்டும்தான் உள்ளனர் என்றும் அவர் கூறினார். அப்போது ஆளுநர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் அதிமுக சார்பில் ஏன் யாரும் கலந்து கொள்ளவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதில்  கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றார், நாங்கள் ஓபிஎஸ்சை போல பந்திக்கு முந்திக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் கிண்டல் செய்தார். 
 

click me!