செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஊழல்: பகீர் கிளப்பிய ஜெயக்குமார்.. அலறி அடித்து ஓடி வந்து அமைச்சர் காட்டிய அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2022, 12:55 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரவு செலவு கணக்குகளை பொதுவெளியில் வைக்கிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்

.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரவு செலவு கணக்குகளை பொதுவெளியில் வைக்கிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

உலக அளவில் மிகவும்  புகழ்வாய்ந்த ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் 150-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதுவரை எந்த நாட்டிலும் நடக்காத அளவுக்கு போட்டி சீரும் சிறப்புமாக நடைபெற்றது, வெளிநாட்டு வீரர்களே தமிழக அரசு நடத்திய ஒலிம்பியாட் போட்டியை மனதார பாராட்டி சென்றுள்ளனர். போட்டிக்கு தமிழக அரசு 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நடத்தி முடித்துள்ளது.

இதையும் படியுங்கள்: மாணவர்களுக்கு இனி Home Work இல்லை...! எந்த எந்த வகுப்புக்கு தெரியுமா..? பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு

விளையாட்டு வீரர்களை சிறப்பான முறையில் வரவேற்று, தங்கவைத்து அவர்களை நன்கு உபசரித்த தமிழக அரசின் ஏற்பாடுகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் இதுகருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியாக இருந்தால் இதைவிட ஒலிம்பியாட் போட்டிநை சிறப்பாக நடத்தியிருப்போம், ஆனால் தமிழக அரசு நடத்தியுள்ளது செஸ் போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என குற்றம்சாட்டினார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :- 

இதையும் படியுங்கள்: தலைநகரை அடித்து தூக்கிய தூங்கா நகரம்.. ஒரே நாளில் டாஸ்மாக் விற்பனை இத்தனை கோடியா?

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் மைதானத்தை ஆய்வு செய்தேன், டென்னிஸ் தொடருக்கான என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தேன். இந்த மைதானம் 3 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்திற்கு புதுப்பிக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விளையாட்டு துறை சரியாக செயல்படவில்லை விளையாட்டுத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

செஸ் தொடர் நடத்தியதில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார், இதே அதிமுக ஒலிம்பியாட் போட்டி நடத்தியிருந்தால் 500 கோடி ரூபாய் செலவு செய்திருக்கும், ஆனால் தமிழக அரசு தனது திறமையால் 114 கோடி ரூபாயில் சர்வதேச ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. எனவே ஒலிம்பியாட் வரவு செலவு கணக்குகளை பொதுத்தளத்தில் வைக்க தயார், யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

click me!