தமிழக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மாநாடு நாளை நடைபெற திட்டிமிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்லவுள்ளதால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும்-ஆளுநரும்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு, தமிழக ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. நீட் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. மேலும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தகளை கூறி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் உயர்கல்வித்துறை கண்டனம் தெரிவித்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பொன்முடி புறக்கணித்தார். இதனிடையே தமிழக அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உதகையில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி தனது தலைமையில் நடத்தினார். இதற்க்கு தமிழக அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எனக்கு வாய் நீளமா குறைவா என்பது பிறகு தெரியும்... ஜெயக்குமாரை அலறவிட்ட மா.சுப்பிரமணியன்
ஆளுநர் நடத்திய துணைவேந்தர்கள் மாநாடு
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா,குஜராத் மாநிலங்களிலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. எனவே இந்த மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் நாளை அதாவது ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு நடைபெறும் என உயர்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு தமிழக ஆளுநர் தரப்பை அதிர்ச்சி அடைய செய்திருந்தது. துணை வேந்தர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இன்று இரவு டெல்லி டெல்லி செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கவுள்ளார். எனவே நாளை திட்டமிட்டப்படி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுமா? என்ற களே்வி எழுந்தது.
முதலமைச்சர் டெல்லி பயணம்
இந்தநிலையில் இன்று பொறியியில் கல்லூரிக்கான கலந்தாய்வு தரவரிசைப்பட்டியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என பொன்முடி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்