“மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஜெ.வுக்கு உயிர் இல்லை…” – அப்பல்லோ டாக்டர் “பகீர்” தகவல்

 
Published : Feb 11, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஜெ.வுக்கு உயிர் இல்லை…” – அப்பல்லோ டாக்டர் “பகீர்” தகவல்

சுருக்கம்

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கடந்த டிசம்பர் 5ம் தேதி, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதற்கிடையில், ஜெயலலதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா உள்பட ஏராளமானோர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழச்சி என்ற பெண், தனது முகநூல் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக பதிவு செய்தார். இச்சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவுடன் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாகவும், இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும் என கூறினார். இதனால், பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி, ராஜினாமா செய்த டாக்டர் ராமசீதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு வரும்போதே உயிர் இல்லை என கூறியுள்ளார்.

வடசென்னை ஆர்கே நகர் பகுதியில் தீபா பேரவை கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட டாக்டர் ராமசீதா பேசியதாவது:-

முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, அவரது உடலில் நாடி துடிப்பு இல்லாமல் இருந்தது. இறந்த நிலையில்தான் கொண்டு வந்தனர். அவரது உடலை பதப்படுத்தி பாதுகாப்பதற்காக வெளிநாட்டு டாக்டர்களை வரவழைத்தனர்.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. முதல் மாடியிலேயே அனைவரையும் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். அங்கு வேலை பார்க்கும் எங்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. இதனால், பலர் வேலை ராஜினாமா செய்தனர்.

தற்போது, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மை கண்டறியும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதாகவும் கூறினார். அதன்படி விசாரணை கமிஷன் அமைத்தால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நாங்கள் தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!