
அமைதிப் புயலான ஓ. பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி அசோக் குமார், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்.பி பி.ஆர். சுந்தரம் ஆகியோர் ஓபிஎஸ்சுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2 எம்பிக்கள் பகிரங்க ஆதரவு தெரிவத்துள்ளதால் சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏற்கெனவே மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் ஓபிஎஸ் கோஷ்டியில் இணைந்து கலக்கி வருகிறார். செங்கோட்டையனின் பரம வைரியான திருப்பூர் தொகுதி எம்.பி சத்யபாமாவும் எந்த நேரத்திலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பி ஓபிஎஸ்சிடம் நேரம் கேட்டு காத்திருக்கிறார்.
அந்த வகையில் 5 எம்பிக்கள் கொத்தாக ஒபிஎஸ்சிடம் இருக்கிறார்கள்.
அவர்கள் தவிர 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இவரிடம் சரணடைய காத்திருப்பதாக கூறப்படுகிறது.