எம்.பி அசோக் சசிகலாவை எதிர்ப்பது ஏன்? - பரபரப்பு பின்னணி தகவல்கள்

 
Published : Feb 11, 2017, 10:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
எம்.பி அசோக் சசிகலாவை எதிர்ப்பது ஏன்? - பரபரப்பு பின்னணி தகவல்கள்

சுருக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் அசோக் குமார். அந்த மாவட்ட அமைச்சரும் நால்வர் அணியில் ஒருவருமான கே.பி முனுசாமியின் மூத்த விசுவாசி இவர்.

சசிகலா எதிர்ப்பை ஆரம்பத்திலிருந்தே கடைபிடித்து வந்த கே.பி. முனுசாமி போயஸ் கார்டனில் சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தால் கூட கண்டுகொள்ளவே மாட்டாராம்.

ஒருமுறை சசிகலா, முனுசாமி வணக்கம் தெரிவிக்காததை ஓபிஎஸ்சிடம் சுட்டி காட்டியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த முனுசாமி நான் அம்மாவை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என நேருக்கு நேர் முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்திருக்கிறார்.

அந்தளவிற்கு சசிகலா எதிர்ப்பு என்பது முனுசாமியோடு கலந்த ஒன்றாகி இருந்தது.

இந்த கே.பி.முனுசாமியின் சீடர்தான் தற்போது ஓபிஎஸ்சுக்கு ஆதரவளித்துள்ள எம்.பி. அசோக் குமார்.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமிக்கு கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த அசோக் குமார் தீவிர சீடராக இருப்பது அந்த பகுதியினருக்கு எப்போதும் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் தான்.

கே.பி.முனுசாமியை நால்வர் அணியிலிருந்து சசிகலா விரட்டிய போதே அவரது கட்சி பதவிகள் பிடுங்கப்பட்ட போதே அவரது எம்.பி. பதவியை ராஜினமா செய்து விடுவதாக மிரட்டினாராம் அசோக் குமார்.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் இவர் கே.பி முனுசாமி எதை சொன்னாலும் செய்வாராம்.

சசிகலா தரப்புக்கு எதிராக முனுசாமி போர்க்கொடி உயர்த்திய முதல் நாளிலேயே அவரிடம் "அண்ணே.. வந்து விடட்டுமா?" என அசோக் குமார் கேட்டாராம்.

அது மட்டுமின்றி அசோக் குமார் எந்த நேரத்திலும் முனுசாமியிடம் சென்று விடுவாரென சசிகலாவுக்கே தெரியுமாம்.

அதனால்தான் இதுவரை 3 முறை எம்.பிக்கள் கூட்டம் கார்டனில் நடைபெற்றதாம்.

ஜெ.வின் மற்றொரு தீவிர விசுவாசியான நாமக்கல் பி.ஆர் சுந்தரம் எம்.பியும் ஓபிஎஸ்சிடம் சரணடைந்துள்ளார்.

தம்பிதுரைக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பதே இதற்கு காரணமாம்.

அசோக் குமார் பி.ஆர். சுந்தரத்தை தொடர்ந்து 10க்கும் ஏற்பட்ட எம்பிக்கள் ஓபிஎஸ் பின்னால் அணி வகுக்க இருப்பதால் சசிகலா தரப்பு கதி கலங்கி போயுள்ளதாம்.

அதிக எம்பிக்கள் ஓபிஎஸ்சுடன் செல்வதையே மத்தியில் ஆளும் பாஜகவும் விரும்புகிறதாம்.

இதை புரிந்து கொண்ட அதிமுக எம்பிக்கள் மேலும் மேலும் ஓபிஎஸ்சிடம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு