அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..? வெளியானது புதிய தகவல்..!

By vinoth kumarFirst Published Oct 16, 2019, 4:53 PM IST
Highlights

தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திடீரென அமித்ஷா அழைப்பினை ஏற்று முருகானந்தம் டெல்லி விரைந்துள்ளார். 

தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திடீரென அமித்ஷா அழைப்பினை ஏற்று முருகானந்தம் டெல்லி விரைந்துள்ளார். 

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டார். இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில், அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

அந்த போட்டியில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.பி.முருகானந்தம், நாயினார் நகேந்திரன் உள்ளிட்ட பெயர்கள் ரேஸில் இருந்து வந்தனர். இவர்கள் அனைவருமே பாஜக தலைமைக்கு முக்கியமானவர்கள் என்பதால் தேர்ந்தெடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வந்தது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழக பாஜக தலைவராக ஏ.பி.முருகானந்தம் என்பவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம். இவர் பாஜகவின் அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளைஞரணியின் தேசிய துணை தலைவர். புதுமுகம் ஒருவரை தலைவராக நியமிக்கலாம் என்பதுதான் பாஜக தலைமையின் ஆரம்பம் முதலே இருக்கும் விருப்பம்.

அந்த விருப்பத்துக்கும் பொருத்தமானவராக முருகானந்தம் என்பதால் அவரை அமித்ஷா தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அமித்ஷாவின் அழைப்பினை ஏற்று டெல்லி விரைந்துள்ளார். இதனால், தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!