எஸ்.பி வேலுமணி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.. வீட்டின் முன் திரண்ட அதிமுக தொண்டர்கள். பரபரப்பு

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2021, 8:53 AM IST
Highlights

நேற்று, அதிமுக ஆட்சியின்போது நடந்த தவறுகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டுக்கு முன்னர் அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எம்ஏல்ஏ விடுதியில் அவரது அறையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதேநேரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ். பி வேலுமணி தொடர்ந்து 52 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது எஸ். பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியாக இருந்த அப்போதைய திமுக ஆளுநரிடம் ஊழல் பட்டியலை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

நேற்று, அதிமுக ஆட்சியின்போது நடந்த  தவறுகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் குனியாமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணியில் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் அந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 52 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை பெற்று தவறாக  1.20 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி வேலுமணி இது திருவேங்கடம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.பி வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 
 

click me!