மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிர்ச்சி.

Published : Aug 10, 2021, 08:30 AM ISTUpdated : Aug 10, 2021, 08:40 AM IST
மாஜி அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிர்ச்சி.

சுருக்கம்

கோவையில் உள்ள எஸ் பி வேலுமணி என் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் அந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் நேரத்தின்போது தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக அமைச்சர்கள் மீது முறையாக விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார். இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் திமுக அரசு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போக்குவரத்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது அதிமுகவினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும், கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து டெல்லிக்கு சென்ற ஓபிஎஸ்-இபிஎஸ்  எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர், திமுக மீது பாஜகவிடம் புகார் கூறியதாக தகவல் வெளியானது. அதனையடுத்து நேற்று, அதிமுக ஆட்சியின்போது நடந்த  தவறுகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கோவையில் குனியாமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணியில் வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு நெருக்கமான சிலரது வீடுகளிலும் அந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 52 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை பெற்று தவறாக  1.20 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி வேலுமணி இது திருவேங்கடம் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாகதகவல் வெளியாகி உள்ளது. 

எஸ்.பி வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது அதிமுக தலைமையை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஸ்டாலின் ஆக்சன் ஆரம்ப மாகிவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!