வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்.. கைதாகிறார் எஸ்.பி.வேலுமணி..? அதிர்ச்சியில் எடப்பாடி

By Ajmal KhanFirst Published Sep 13, 2022, 11:27 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி விளக்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த்தாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று இரவுக்குள் எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு

அதிமுக ஆட்சியில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை என முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். அதிமுக ஆட்சி காலத்தின் போதே மாநகராட்சி பணிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக திமுக மற்றும் அறப்போர் இயக்கும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து ஏற்கனவே இரண்டு முறை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து இன்று காலை மீண்டும் 3 வது முறையாக சோதனை நடைபெற்று வருகிறது. 

சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்..! ஆ ராசாவை சிறையில் அடைக்க வேண்டும்..! இறங்கி அடிக்கும் பாஜக

அதிமுக எம்எல்ஏக்கள் கைது

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,  எஸ் பி வேலுமணி தற்போதைய தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கிராமப்புரங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின் போது மிகப் பெரிய அளவில் முறைகேடு செய்து தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கிய வகையில் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும் கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது ஏன்..? சசிகலா கூறிய ரகசிய தகவல்

எஸ்.பி.வேலுமணி கைதாக வாய்ப்பு

இதனையடுத்து இன்று எஸ்.பி.வேலுமணி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் வீட்டிற்கு முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். கடந்த முறை சோதனை மேற்கொண்ட போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர் அவர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்பட்டது. அது போன்று இந்தமுறை நடைபெறகூடாது என்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே இன்று சோதனைக்கு பிறகு எஸ்.பி. வேலுமணியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டே சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அந்த தெரு முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு.. எதிர்ப்பு தெரிவித்த 7 அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக கைது

click me!