SP Velumani : வருமானத்தை விட 3,928% மடங்கு அதிகமாக சொத்து குவிப்பு.. எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு !!

By Raghupati RFirst Published Mar 15, 2022, 11:31 AM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் சோதனை :

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 2015-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு மார்ச் வரை 58 கோடியே 23 லட்ச ரூபாய் முறைகேடாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது வருமானத்தை விட 3928% சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சென்னை, கோவை, சேலம், நமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். வினாயகபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

வெளிநாட்டு பயணம் :

போலீசார் கேள்வி இதே போல் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் நகை கடையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக கோவை மைல்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை தகவலின்படி, எஸ்பி வேலுமணி 2019இல் மட்டும் மூன்று முறை சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர், மொத்தமாக 14 நாள்கள் தங்கியுள்ளார். அதே போல், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, மாலத்தீவ் என பல நாடுகளுக்கு சென்று தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. மொத்தமாக, 32 நாள்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார். 

அவரது குடும்ப உறுப்பினர்கள் வித்யாதேவி, விகாஷ், சாரங்கி ஆகியோரும் பல முறை தனியாகவும், கூட்டாகவும் ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மாலத்தீவ் என பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மொத்தமாக 130 நாள்கள் வெளிநாடுகளில் செலவிட்டுள்ளனர். 

முறைகேடான பணத்தின் மூலம் பல இடங்களில் குடும்பத்தினர் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ள எஸ்பி வேலுமணி, இதே நடைமுறையை வெளிநாடுகளிலும் பின்பற்றியிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 8 இடங்களிலும் சேலம், நாமக்கல், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!