என்பிஆர் ,என்சிஆரின் இன்னொரு கொடூர முகம்.!! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!!

Published : Mar 01, 2020, 09:35 AM IST
என்பிஆர் ,என்சிஆரின் இன்னொரு கொடூர முகம்.!! இயக்குனர் வெற்றிமாறன் காட்டம்!!

சுருக்கம்

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில்  42 பேர் உயிரிழந்துள்ளனர்.300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கிறார்கள்.  

T.Balamurukan

இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்..,"என்.பி.ஆர். என்பது என்.சி.ஆரின் இன்னொரு முகம்தான். முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும்போது அதிகாரிகள் வருவார்கள். ஆவணங்கள் கேட்பார்கள். நாம் அளிப்போம். அப்போது அவர்களுக்கு யார் மீதேனும் சந்தேகம் இருந்தால் D என்று குறிப்பிட்டுக் கொள்வார்கள். இந்த D குறியீட்டை நமக்கெதிராக எந்த காலத்திலும் எப்போதும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 

ஆவணங்களை காட்டுவதும், காட்டாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம்தான். அதனால் அதனை கட்டாயம் காட்ட வேண்டும் என்கிற எந்த அவசியமும் இப்போது இல்லை. எனவே, ஒருவேளை அதிகாரிகள் வந்து கேட்டால்கூட நாம் ஆவணங்களை காட்ட வேண்டியது இல்லை.ஆவணங்களை காட்டாமல் இருப்பதன் மூலமாகவே நாம் ஒற்றுமையாக இருக்கலாம் என நினைக்கிறேன். குடியுரிமை சட்டதிருத்தம் என்பதும் சட்டம் அல்ல. அது மக்களை தனிமைப்படுத்துவதற்கான திட்டமாகத்தான் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக மக்கள் மனதில் இந்த சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!