ராஜசபா சீட் விவகாரம்; கதவை சாத்திய எடப்பாடி;திமுகவுக்கு சிக்னல் கொடுக்கும் தேமுதிக;

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2020, 12:14 AM IST
Highlights

அதிமுக முதுகுகில் தொடர்ந்து சவ்வாரி செய்து வரும் கட்சிகளில் ஒன்று தேமுதிக. இந்த கட்சி கடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக, அதிமுக பக்கம் மாறிமாறி தூது அனுப்பி கடைசியில் முக்கியமான 'ப' வைட்டமின், சீட் ஒதுக்கீடு விசயத்தில் ஒத்துவராததால் எந்த பக்கமும் போக முடியாமல் தனித்து விட்டப்பட்டது தேமுதிக. இதைத் ஜெயலலிதாவும், கருணாநிதியும் விரும்பினார்கள். அதே போல் தேமுதிக தனிமரமாக தனித்து விடப்பட்டது. 

T.Balamurukan

அதிமுக முதுகுகில் தொடர்ந்து சவ்வாரி செய்து வரும் கட்சிகளில் ஒன்று தேமுதிக. இந்த கட்சி கடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக, அதிமுக பக்கம் மாறிமாறி தூது அனுப்பி கடைசியில் முக்கியமான 'ப' வைட்டமின், சீட் ஒதுக்கீடு விசயத்தில் ஒத்துவராததால் எந்த பக்கமும் போக முடியாமல் தனித்து விட்டப்பட்டது தேமுதிக. இதைத் ஜெயலலிதாவும், கருணாநிதியும் விரும்பினார்கள். அதே போல் தேமுதிக தனிமரமாக தனித்து விடப்பட்டது. 


தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்று  சேர்ந்து மக்கள் நலக்கூட்டணி என்று மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்கினார்கள். இந்த கூட்டணி நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் மக்கள் இவர்களுக்கு ஒரு சீட்டைக்கூட வழங்கவில்லை. தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணியில் இருந்தவர்கள் சில்லுசில்லாக சிதறிப்போனார்கள்.இந்தாண்டு நடைபெற்ற எம்பி தேர்தலில் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுக மீது சவ்வாரி ஏறி  அதிமுக, தேமுதிக,  கூட்டணிக்கு  ஒரு சீட் கூட கிடைக்காத அளவிற்கு அமோக வெற்றி பெற்றனர். தேர்தல் உடன்படிக்கையின் போது பாமக விற்கு மட்டுமே மாநிலங்களவையில் ஒரு சீட் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தேமுதிகவிற்கு வாய்மொழி உத்தரவாக சொல்லப்பட்டதாம். 
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி திமுக அதிமுகவை சேர்ந்த திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த் சசிகலாபுஷ்பா ஆகியோரின் பதவி ஏப்ரல் 2ம் தேதியோடு முடிவடைகிறது. 


தேமுதிக கெஞ்சிப்பார்த்தது, மிரட்டிப்பார்த்தது எதுக்குமே எடப்பாடியும் ,ஒபிஎஸ்ம் சம்மதிக்கவில்லை. திருச்சியில் முதல்வர் எடப்பாடியிடம் ‘தேமுதிகவிற்கு எம்பி சீட் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு 'கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. கட்சியில் சீனியர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று பதில் சொன்னார். இந்த நிலையில் தேமுகதி இளைஞர்அணி செயலாளர் சுதீஷ் முதல்வரை சந்தித்து எப்படியாவது எங்களுக்கு எம்பி சீட் கொடுங்கள் என்று கெஞ்சிபார்த்துவிட்டு வந்திருக்கிறார். ஆனால் முதல்வர் எடப்பாடியோ ‘ இருப்பது 3சீட் அதில் ஒன்னு கண்டிப்பாக பாஜக சொல்லும்  நபருக்கு நாங்கள் கொடுத்தாக வேண்டும். அதுபடி பார்த்தால் ஏசி சண்முகத்திற்கு கொடுக்க வேண்டும்.மீதம் இருப்பது 2 சீட் தான். இதில்எங்கள் கட்சியின் சீனியர்கள் முட்டி மோதுகிறார்கள். நான் அவர்களைத்தான் பார்க்க வேண்டியது இருக்கிறது. வருகிற எம்எல்ஏ தேர்தலில் உங்களுக்கு நிறைய சாதகமான தொகுதிகளை விட்டுத்தருகிறோம் என்றெல்லாம் பேசி சுதீiஷ்   கூல்படுத்தி அனுப்பினாராம் எடப்பாடி.


அதிமுக நிச்சயம் கதவை சாத்திவிடும் என்று தேமுதிகவிற்கு தெரிந்துவிட்டது. இந்த நிலையில் அவசரக்கூட்டம் விஜயகாந்த் தலைமையில் பிரேமலதா,சுதீஷ்,  பார்த்தசாரதி இளங்கோவன் போன்ற முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அப்போது பேசியவர்கள்.’ முக்கிய முடிவு ஒன்றை எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


 பாமக விட நாம இளச்சுபோன கட்சியா? நமக்கு இருக்கும் வாக்கு வங்கிகளைவிட குறைவாக இருக்கும் கட்சி பாமக. அவர்களுக்கு அதிமுக கொடுக்கும் மரியாதை தேமுதிகவிற்கு இல்லை.நாமளும் ஒருமாதகாலமாக அதிமுக மீது நம்பிக்கை வைத்திருந்தோம்.ஆனால் அவர்கள் நம்மளை மதிக்கவில்லை. இனி நம்ம கேப்டன் வழி தனிவழியாகத் தான் இருக்கும். சட்டமன்றத்தேர்தலில் நமக்கான பலம் என்ன என்பதை அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும். அதிமுக, தேமுதிக இல்லாமல் வெற்றி பெறமுடியாது என்கிற நிலையை நாம் அவர்களுக்கு உணர வைக்கவேண்டும்.திமுகவிற்கு கூட நாம் ஆதரவு தெரிவிப்போம் என்று ஆலோசனை நடந்திருக்கிறதாம்.
அதிமுகவுக்கு எதிராக களமிறங்க காத்திருக்கிறது தேமுதிக. அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா.!!
 
 

click me!