சென்னைக்கு பக்கத்தில் இன்னொரு மாநகராட்சி... தட்டி தூக்கிய தாம்பரம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 5, 2021, 12:15 PM IST
Highlights

குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது, அந்த வகையில் புதிய நகராட்சிகள் மாநகராட்சிகள் அறிவிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி  நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் புதிய மாநகராட்சியாக உருவெடுத்து உள்ளது. அதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை அடுத்து அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள நகராட்சி,பேரூராட்சி பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிய மாநகராட்சியாக தாம்பரத்தை அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழகத்தில் புதிதாக 19 நகராட்சிகளை உருவாக்குவதற்கான உத்தரவுகளை நகராட்சி நிர்வாகம் ஏற்கனே வெளியிட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக சமீபத்தில் தரம்  உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் நாம் மட்டும் 664 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. அதாவது மக்கள் தொகை எண்ணிக்கை,  பரப்பளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பேரூராட்சிகள் நகராட்சிகளாவும், மாநகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் சமீபத்தில் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பின்னர் கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதது. குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது, அந்த வகையில் புதிய நகராட்சிகள் மாநகராட்சிகள் அறிவிக்கும் நடவடிக்கைகளில் நகராட்சி  நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 

அதேவேளையில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் கடந்த நகராட்சி நிர்வாகம் மானிய கோரிக்கை விவாதத்தில் பொது அத்துறை அமைச்சர் கே. என். நேரு பல்லாவரம்,  தாம்பரம், செம்பாக்கம்,  பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என அறிவித்தார். தற்போது அந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிய மாநகராட்சிக்குறித்த அரசாணை தமிழக அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய  மாநகராட்சியான தாமதத்துடன் பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளும் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை பேரூராட்சிகளும் அதில்  இணைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகராட்சியில் 15 கிராம ஊராட்சிகளும் இணைத்து அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தகவல் தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள  நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பாதாள சாக்கடை போன்றவை விரிவுபடுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு அருகிலேயே தாம்பரம் மாநகராட்சி உருவாகியுள்ளதால், அதில் கட்டமைப்பு, மற்றும்  வளர்ச்சிப் பணிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, மொத்தத்தில் பத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் இணைந்து தாம்பரம் மாநகராட்சி உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!