தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஐந்து நாட்கள் பயணமாக, வரும், 20ம் தேதி, தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை தமிழர்களிடம் எடுத்துரைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் களத்தில் தீவிரம் காட்டும் பாஜக
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலத்திற்கும் குறைவான நாட்கள் இருப்பதால் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக கைப்பற்ற வேண்டிய தொகுதிகளை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெ வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே தொகுதிகளில் வாக்குசாவடி முகவர்களை அமைக்கும் பணியில் தீவிர்ம காட்டி வருகிறது. இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.
undefined
அமெரிக்கா, லண்டன் பயணம்
கடந்த ஆண்டு இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் செய்த அண்ணாமலை அங்கு இலங்கை தமிழர்களை சந்தித்து உரையாடினார். அப்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு மூலம் செய்ய அழுத்தம் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற அண்ணாமலை தனது Fellowship படிப்பு காரணங்களுக்காக அப்போது 2 வாரம் அங்கு தங்கியிருந்தார். அப்போது அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் சாதனைகளை பற்றி பேசினார். இதனையடுத்து கடந்த ஜூன் 22ஆம் தேதி லண்டன் சென்றார். அங்கு 8 நாட்கள் பயணம் செய்தவர் லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்தார். மேலும் பாஜக சார்ந்த பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
தென் ஆப்ரிக்காவிற்கு செல்லும் அண்ணாமலை
இதனையடுத்து அடுத்த கட்டமாக வருகிற 20 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவிற்கு அண்ணாமலை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் பயணமாக தென் ஆப்ரிக்கா செல்லவுள்ளதாகவும், இது கட்சி சார்ந்த பயணமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் சாதனைகளை அண்ணாமலை விளக்க இருப்பதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்