அதிமுகவோடு கூட்டணி முறிவு..? டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை...! மோடி, அமித்ஷாவை இன்று சந்திக்க திட்டம்

By Ajmal KhanFirst Published Mar 23, 2023, 8:42 AM IST
Highlights


தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில், இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசவுள்ளார்.

அதிமுக- பாஜக மோதல்

அதிமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு பாஜக ஆதரவு தராமல் காத்திருக்க வைத்தது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து பாஜக ஐடி பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக- பாஜக நிர்வாகிகள் மத்தியில் கருத்து மோதலை அதிகரித்தது. ஒருவருக்கொருவர் விமர்சித்தது வந்தனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, 

ராஜினாமா செய்ய தயார்

திராவிட கட்சிகளுடன்  இணைந்து  பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. நம்முடைய முடிவை நாம் எடுப்போம். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதையும் மீறி கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என தெரிவித்து இருந்தார். மேலும் இது தொடர்பாக மத்திய பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். அதே நேரத்தில் அண்ணாமலையின் கருத்திற்கு பாஜகவில் உள்ள மூத்த தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். அண்ணாமலைக்கு கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அதிகாரம் இல்லையென கூறியிருந்தனர்.

டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை

இந்தநிலையில் வருகிற 26 ஆம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது முன்கூட்டியே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அண்ணாமலை இன்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இன்று அல்லது நாளை பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தமிழக கூட்டணி தொடர்பாக பேச இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

யாரு என்ன சொன்ன என்ன? அதிமுக - பாஜக கூட்டணி எந்த மாற்றமும் இல்லை.. நயினார் நாகேந்திரன் அதிரடி சரவெடி.!

click me!