Annamalai : சிங்கத்துக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு..? நரிகள் இதை கேட்கலாமா.? பாஜக பதிலடியை பாருங்க!

By Asianet TamilFirst Published Apr 2, 2022, 8:27 PM IST
Highlights

அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், (கர்நாடக) சிங்கத்துக்கு எதற்கு பாதுபாப்பு என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

சிங்கத்துக்கு (அண்ணாமலை) ஏன் பாதுகாப்பு என்று கேட்பவர்களுக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதில் அளித்திருக்கிறார்.

அண்ணாமலைக்கு பாதுகாப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. நாட்டில் நான்காவது மிகப் பெரிய பாதுகாப்பு வளையம் ஆகும் ‘ஒய்’ பிரிவு. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு இந்தப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி அண்ணாமலையின் பாதுகாப்பை இனி மத்திய அரசின் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஏற்பார்கள். தமிழக பாஜக தலைவராக கடந்த ஆண்டு பதவியேற்றது முதல் அண்ணாமலை துடிப்போடு செயல்பட்டு வருகிறார். ஆளும் திமுக அரசை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால், அமைச்சர்களுக்கும் அவருக்கு அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுகின்றன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்?

மேலும் சமூக ஊடகங்களில் திமுகவினரும் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனால், முன்பைவிட கட்சிப் பணிகளை அண்ணாமலை முடுக்கி விட்டிருக்கிறார். பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் சுற்றுப்பயணங்களை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியிருப்பதன் மூலம், அவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்று மத்திய அரசு கருதுகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தமிழக பாஜக விளக்கம்

அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், (கர்நாடக) சிங்கத்துக்கு எதற்கு பாதுபாப்பு என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தக் கேள்விக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளார்.

சிங்கத்துக்கு ஏன் பாதுகாப்பு?
கேட்பது சிங்கம் 
அல்ல
நரிகள்....
அதனால்தான் 
பாதுகாப்பு
என்று எஸ்.ஆர். சேகர் பதில் அளித்திருக்கிறார்.
 

click me!