மாட்டு வண்டியில் வந்த அண்ணாமலை... எதிர்ப்பது ஆளும் பாஜகவை அல்ல... காங்கிரஸ்காரர்களை..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2021, 11:01 AM IST
Highlights

கர்நாடகாவை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரததிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்தார். 

கர்நாடகாவை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரததிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்தார். 

மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் தஞ்சையில் அண்ணாமலை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். தஞ்சையில் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து  இன்று தஞ்சையில் நடக்கும்   உண்ணாவிரதம் நடைபெறுகிறது. 

 நான் தஞ்சையில் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அரசு, கர்நாடக முதல்வரை எதிர்த்து அல்ல. அங்குள்ள காங்., தலைவர் சித்தராமையா, சிவகுமார் போன்றோரும், 'மேகதாது அணை கட்டுவதை தமிழகத்துக்கு ஏன் கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும்' என கேட்பதை எதிர்த்து தான் போராட உள்ளேன்.

அம்மாநிலத்தில் விவசாயிகளை காக்க, அங்குள்ள பா.ஜ., முயல்கிறது. தமிழக விவசாயிகளுக்காக நாங்கள் போராடுகிறோம். காவிரி ஆணையம் அனுமதி பெறாமல், அணையை கட்ட முடியாது என்பதை உணர வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.

click me!