பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வராது சொன்ன ராகுல்.. கட்சியினருக்கு லட்டு வாங்கி கொடுத்த அண்ணாமலை.. ஏன் தெரியுமா?

By vinoth kumarFirst Published Feb 10, 2022, 1:12 PM IST
Highlights

பாஜக சார்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராக களமிறங்கி உள்ளோம். எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது. எங்களுக்கு முருகனும் வேண்டும், அல்லாவும் வேண்டும், இயேசுவும் வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை. 

எந்த கட்சியை பார்த்து தோற்கும் என ராகுல் காந்தி கூறுகிறாரோ அந்த கட்சிக்கு சுக்கிர திசை தொடங்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக சார்பாக மாநகராட்சி, பேரூராட்சியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை;-  8 மாத கால திமுகவின் ஆட்சி 80 ஆண்டு காலம் ஆட்சி செய்தது போல மக்களுக்கு சலிப்பை கொடுத்துள்ளது. திமுக அரசு தேர்தலின் போது 518 வாக்குறுதிகள் வழங்கியது ஆனால் அதில் 7 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. பொங்கல் தொகுப்பில் பாம்பு, பல்லி என பல விஷப் பூச்சிக்கள் இருந்தது. பொங்கல் தொகுப்பில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். 

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 12 மாநில முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்த முதல்வரும் பதில் கடிதம் எழுதவில்லை. உங்கள் மானம் போகிறது. நம் மானத்தையும் ஏன் சேர்த்து வாங்குகிறீகள் என கேள்வி எழுப்பினார். பாஜக மதவாத கட்சி, இந்துக்களுக்கான கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் பாஜக சார்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், திருநங்கைகள் வேட்பாளராக களமிறங்கி உள்ளோம். எங்களுக்கு மதம், பாலின பாகுபாடு கிடையாது. எங்களுக்கு முருகனும் வேண்டும், அல்லாவும் வேண்டும், இயேசுவும் வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வது நாங்கள் இல்லை. 

தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வராது என ராகுல் சொன்னார். அதை கேட்டவுடன் நான் லட்டு வாங்கி வர கட்சியினரிடம் சொன்னேன். ராகுல் காந்தி குஜராத் முதல்வராக மோடி வரமாட்டார் என்று கூறிய பொழுது முதல்வரானார். பிரதமர் ஆக மாட்டார் என்று கூறிய பொழுது அதிக மெஜாரிட்டில் பிரதமரானார். ராகுல் காந்தி சொன்னாலே அவர்களுக்கு சுக்கிர திசை தொடங்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

click me!