2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக-பாஜக இடையே தான் போட்டி..! மற்ற கட்சிக்கு எல்லாம் பவர் இல்லை- அண்ணாமலை அதிரடி

By Ajmal Khan  |  First Published Oct 5, 2023, 3:14 PM IST

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையில் தான் போட்டி எனவும், கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து சென்றதில் எந்த வருத்தமும் இல்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சந்தோஷமோ வருத்தமோ இல்லை

சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது.  கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2024 தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் எனவும்,  தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் சந்தோஷமோ வருத்தமோ இல்லை என கூறிய அவர்,

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம் என கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் வரும் எனவும், கூட்டணியில் யாரை சேர்ப்பது, கூட்டணியை விரிவுப்படுத்துவது குறித்தெல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். 

பாஜக- திமுக இடையே தான் போட்டி

அதிமுக வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறிய கருத்துக்கு 2024 தேர்தல் முடிவுதான் இந்த கேள்விக்கு தீர்வாக அமையும் என கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றிகரமான அடியை எடுத்து வைக்க வேண்டும், மூன்றாவது முறை மோடி பிரதமராக. வேண்டும். அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. பா.ஜ.க தனித்து போட்டியிடாத கட்சி இல்லை. ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றிகளை பெற்ற கட்சி எனவும் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

கூட்டணியில் இருந்து போறவங்க போகட்டும்.. அதை பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.. அண்ணாமலை.!

click me!