பாஜக தொண்டரின் குழந்தை ஒருவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை பெயர் குப்புசாமி. இவருடைய தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன்.
கோவையில் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை, இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார்.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!
இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் மூலம் பொதுமக்களால் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைக்கப் பெற்றார். திடீரென தனது ஐ.பி.எஸ் பணியை அண்ணாமலை ராஜினாமா செய்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், “காக்கிச்சட்டை அணிந்து செயல்பட்ட ஒவ்வொரு நிகழ்வுகளையும் என்னால் மறக்க முடியாது.
போலீஸ் பணி என்பது கடவுளுக்கு நெருக்கமான பணி என்பதை நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார். அது அரசியல் அமைப்பு அல்ல என்றும் அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு என்றும் தெரிவித்த அவர், மக்களிடன் விழிப்பிணர்வை ஏற்படுத்துவதற்காக அதனை ஆரம்பித்ததாக தெரிவித்தார். பல சமூக பணிகளைஅதன் மூலமாக செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
தொண்டனுக்காக தலைவன் அண்ணா 🙏🙏
தொண்டரின் குழந்தை பத்தாவது பரிட்சை எழுதுவதனால் அந்த குழந்தைக்கு வீடியோவில் வாழ்த்து சொல்லும் தலைவர்
பாஜகவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் 👍👍👍🤝 pic.twitter.com/F3ZlqgnHGD
திடீரென பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட அரசியல் களத்தில் அண்ணாமலை குதித்தார். ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கட்சியான அதிமுகவை விட வெளுத்து வாங்கி வருகிறார் அண்ணாமலை. அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. இந்த நிலையில் அண்ணாமலை பாஜக தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு தேர்வு எழுத வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், பாஜக தொண்டர் ஒருவரின் குழந்தை 10வது தேர்வு எழுத உள்ள நிலையில், அக்குழந்தைக்கு வாழ்த்து சொல்கிறார். இதை பகிர்ந்துள்ள பாஜகவை சேர்ந்த சிலர் பாஜகவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். இவர் தொண்டனுக்காக தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பாஜகவினர் ஷேர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இதையும் படிங்க..பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்..பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி.. பதறிய அதிகாரிகள் - இதுதான் காரணமா.!!