முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Feb 3, 2023, 10:53 AM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தலில்  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி மற்றும் அண்ணாமலை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எடப்பாடியை சந்தித்த அண்ணாமலை

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு பிரிவாக பிரிந்துள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இரண்டு தரப்பும் வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அண்ணாமலையிடம் கருத்து கேட்ட போது தங்களது நிலைப்பாடு தொடர்பாக விரைவில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

ஓபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இரண்டு தரப்பும் பிரிந்துள்ளது. அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக திமுகவிற்கே வெற்றி கிடைக்கும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்த ஓபதும் உறுதியான தகவலை இன்னும் சிறிது நேரத்தில் பாஜக அறிவிக்கும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்

இபிஎஸ் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள்!ஓபிஎஸ் உடன் சேர்ந்த தேர்தல் ஆணையம்?இன்று என்ன நடக்கும்?.திக்..திக்

click me!