ஒரு முறை பாஜக கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சியை கொடுத்து பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் கொடுப்போம். பாஜகவில் ஒருவர் ஊழல் செய்தால் அவர் ஆட்சிக் கட்டிலில் இருக்கமாட்டார். மாறாக சிறைச்சாலையில் தான் இருப்பார்.
ஒரு முறை பாஜக கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சியை கொடுத்து பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் கொடுப்போம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேற்கு தாம்பரத்தில் உள்ள சண்முகம் சாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்;- திருக்குறள் என்ற ஒப்பற்ற நூல் எழுதிய திருவள்ளுவனின் ஊருக்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். செங்கோல் என்பது தமிழ்நாட்டின் பெருமையாக மட்டுமே இருந்தது. அதனை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நிறுவியது முதல் இந்தியா முழுவதும் செங்கோலிள் புகழ் பரவியது. தொன்மையான, அழகிய தமிழில் பேச எனக்கும் ஆசைதான். எனக்கு தமிழ் தெரியாததால், என் தாய்மொழியான இந்தியில் பேசுகிறேன் என்றார்.
இதையும் படிங்க;- நேற்று அண்ணாமலை கைகளால் விருது; இன்று அரசால் விலங்கு - உமா கார்க்கிக்காக குரல் கொடுக்கும் பாஜக
மக்களின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது பாஜக. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. ஒரு முறை பாஜக கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சியை கொடுத்து பாருங்கள். ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் கொடுப்போம். பாஜகவில் ஒருவர் ஊழல் செய்தால் அவர் ஆட்சிக் கட்டிலில் இருக்கமாட்டார். மாறாக சிறைச்சாலையில் தான் இருப்பார்.
இதையும் படிங்க;- திடீரென லண்டன் கிளம்பும் அண்ணாமலை! 6 நாள் பயணத்தின் பின்னணியில் உள்ள பிளான் என்ன?
செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம். அண்ணாமலை தமிழகத்தின் தலைவர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவராக வளர்ந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.