எனது மறு உருவம் தான் பாரதிய ஜனதா கட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பாஜகவை பின்பற்றவில்லை. மாறாக பாஜக தான் என்னை பின்பற்றுகிறது. எனது மறு உருவம் பாஜக என்று கூறினால் சரியாக இருக்கும். நான் முருகனை கும்பிட்டால், பாஜகவும் முருகனை கும்பிடும்.
நான் வேலு நாச்சியார் குறித்து பேசினால், பாஜகவும் வேலு நாச்சியார் குறித்து பேசும். ஈழம் குறித்து பேசினால் அக்கட்சியும் பேசிப் பார்க்கும். அதே போன்று நான் ராஜராஜ சோழன் என்று பேசினால், அதனையும் பாஜக பேசும். நான் தமிழ் பாட்டன் என்பேன், அக்கட்சி இந்து மன்னன் என்று கூறும். அக்காலத்தில் இந்து என்ற சொல்லே கிடையாது. இந்தியாவிலேயே இந்து என்ற சொல்் உள்ள ஒரே மொழி தமிழ் தான்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் நடிகர் விஜய்யை இணைக்க தயார் - எம்.பி. விஜய் வசந்த் பேட்டி
சங்க இலக்கியங்களில் இந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து என்றால் நிலவை குறிக்கும். தமிழக அரசு கையாலாகாத அரசாக உள்ளதால் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துவார். காங்கிரசின் 10 ஆண்டு ஊழல் ஆட்சியால் தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. மோடியை வீழ்த்த மாநில கட்சிகள் வலுப்பெற வேண்டும்.
Crime: தாயின் கள்ளக்காதலை கண்டித்த மகன் ஓட ஓட வெட்டி கொலை; கள்ளக்காதலன் வெறிச்செயல்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நரேந்திர மோடி அவரை ஊதித்தள்ளிவிடுவார் என்றார். வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை சட்டம் கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.