அண்ணாமலை தினமும் எதையாவது தூக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.. செம்மய்யா கிண்டல் அடித்த வைகோ.

Published : May 06, 2022, 12:50 PM ISTUpdated : May 06, 2022, 12:51 PM IST
அண்ணாமலை தினமும் எதையாவது தூக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.. செம்மய்யா கிண்டல் அடித்த வைகோ.

சுருக்கம்

அண்ணாமலை பல்லக்கு மட்டும் தூக்குவேன் என்று சொல்லவில்லை தினமும் எதையாவது ஒன்றைத் தூக்கிக் கொண்டு தான் இருக்கிறார் என  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார் .

அண்ணாமலை பல்லக்கு மட்டும் தூக்குவேன் என்று சொல்லவில்லை தினமும் எதையாவது ஒன்றைத் தூக்கிக் கொண்டு தான் இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். தருமபுர ஆதீனத்திற்கு பல்லக்குத் தூக்க போவேன் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில் வைகோ இவ்வாறு விமர்சித்துள்ளார்.

மதிமுக இருபத்தி ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கழக செயலாளர் துறை வைகோ ஆகியோர் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் மற்றும் அண்ணாவின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிமுக கொடியை ஏற்றினர். பின்னர் திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, மதிமுக 29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதுவரை எத்தனையோ நெருப்பாறுகளை கடந்து வந்திருக்கிறோம்.

எத்தனையோ அவதூறுகள், அவமானம் சொற்களையும் தாங்கியுள்ளது இந்த கட்சி, இதுவரையிலும் தொண்டர்களை வைத்துத்தான் இந்த கட்சி நடந்து வருகிறது கோபுர பொம்மைகள் கோபுரங்களை தாங்கி நிற்பதில்லை, அடி கற்கள்தான் கோபுரங்களில் தாங்கி நிற்கிறது என்றார். அத்தகைய அடி கற்களாலான தொண்டர்களை கொண்ட இயக்கம்தான் மதிமுக இக்காட்சி இன்னும் வருங்காலத்தில் வலிமையோடும் புதுப்பொலிவுடன் ஓங்கி வளரும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுர ஆதீன விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் எடுத்த முடிவு சரியானது தான், நாங்கள் மதத்தை வைத்து ஆட்சி செய்யவில்லை, அறிஞர் அண்ணாவின் வழியில் தான் ஆட்சி செய்கிறோம்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் எங்கள் கொள்கை என தெரிவித்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் அவருக்கு பல்லக்கு தூக்க செல்லுவேன் எனக் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த வைகோ சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக பல்லக்கு மட்டும் தூக்கம் வருவதாக சொல்லவில்லை அண்ணாமலை தினமும் எதையாவது தூக்கிக் கொண்டு தான் இருக்கிறார் என்றார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி