"அண்ணாமலை ஒரு மாதிரியான அதிகாரி ”.. காவல் துறையில் இருந்து துரத்தப்பட்டார். அடங்காத ஆர்.எஸ் பாரதி.

By Ezhilarasan Babu  |  First Published Dec 21, 2021, 1:11 PM IST

இவர் ஒரு ஒழுக்கமான காவல்துறை அதிகாரி அல்ல  என்று தெரிவித்தார். டி.ஜி.பி சைலேந்தரபாபுவை விமர்சித்ததில் இருந்தே தெரிகிறது அண்ணாமலை ஒரு ஒழுக்கமான அதிகாரி இல்லை என்று முன்னால் காவல்துறையில் இருந்த ஒருவர் எப்படி உயர் காவல்துறை அதிகாரியை விமர்சிக்கலாம் என கேள்வி எழுப்பிய அவர், 


அண்ணாமலை ஒரு மாதிரியான அதிகாரி அதனால்தான் அவர் காவல் துறையில் இருந்து துரத்தப்பட்டார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மழை வெள்ளத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் இறங்கி பணியாற்றியதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதில் பாஜக ஒருபடி மேலே போய் முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி என பலரையும் விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதேநேரத்தில் பாஜகவின் ஆதரவாளர்களென சமூக வலைத்தளத்தில் திமுகவை வசித்து வருபவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை அண்ணாமலை மிகக் கடுமையாக கண்டித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் அது அரசுக்கு இறுதி எச்சரிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது இத்துடன் தனது மிரட்டல் நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார். அதேபோல் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது தமிழக  காவல் துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. சைக்கிளிங் போவதற்கும், செல்பி எடுப்பதற்கும்தான் டிஜிபி பதவி உள்ளது.

வெளிப்படையாகவே சொல்கிறேன் காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லவே இல்லை என்றும், திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் டிஜிபியும் காவல்துறையும் உள்ளது என்றார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக டிஜிபி குறித்து கருத்து கூறுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என விமர்சித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

   

அதாவது திமுகவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் பாஜக முன்னாள் மாநில தலைவரும் தற்போதைய இணை அமைச்சருமான எல். முருகன் மீதான அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் அமைந்துள்ள சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி, 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற்றியை தாங்க முடியாமல் ஒரு சிலர் வயிற்றேரிச்சல் காரணமாக பேசினர் அதில் ஒருவர் எல்.முருகன். பதவி கிடைப்பதற்காக எல்.முருகன் முரசொலி மீது சேற்றை வாரி பூசினார். முரசோலி பத்திரிக்கைகான அனைத்து பத்திரங்களையும் நீதிமன்றத்திலும், ஆணையத்திலும் நான் தாக்கல் செய்து இருந்தேன். பாஜகவுக்கு பயப்பட கூடிய கட்சி திமுக அல்ல. எச்.ராஜா போன்ற தலைவர்களை கைது செய்யாதது கடந்த ஆட்சியில் தான் என கூறிய அவர், 

மாரிதாஸ் மீது கொடுத்த தீர்ப்பு குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை நீதிமன்ற தீர்ப்பு குறித்து தவறான கருத்தை சொல்ல நான் விரும்பவில்லை. எப்ஐஆர் போட்ட ஒரு வழக்கில் மூன்றே நாளில் நீதிமன்றத்தில் விடுவிப்பது  எப்படி என்ற கேள்வி எழுகிறது,  அண்ணாமலையை ஒரு மனிதராகவே நான் கருதவில்லை. திருவண்ணாமலை அண்ணாமலையாரையே பார்த்து விட்டோம். இவர் ஒரு ஒழுக்கமான காவல்துறை அதிகாரி அல்ல  என்று தெரிவித்தார். டி.ஜி.பி சைலேந்தரபாபுவை விமர்சித்ததில் இருந்தே தெரிகிறது அண்ணாமலை ஒரு ஒழுக்கமான அதிகாரி இல்லை என்று முன்னால் காவல்துறையில் இருந்த ஒருவர் எப்படி உயர் காவல்துறை அதிகாரியை விமர்சிக்கலாம் என கேள்வி எழுப்பிய அவர், இவர் ஒரு மாதிரியான அதிகாரியாக இருந்ததால் தான் காவல்துறையில் இருந்து தூரத்தப்பட்டதாக ஆர்.எஸ் பாரதி விமர்ச்சித்தார்.
 

click me!