திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்..! ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Jul 22, 2022, 8:37 AM IST
Highlights

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு எதிராக சொந்த தொகுதி மக்களே போராட்டம் நடத்துவதகாவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

திமுக- பாஜக இடையே கருத்து மோதல் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுகவை பாஜக விமர்சிப்பதும், பாஜகவை திமுக விமர்சிப்பது என நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மின் வாரியதுறையில் டெண்டர் வழங்கியதில் கோபாலபுரத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்து இருந்தார். இதற்க்கு கண்டனம் தெரிவித்த செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார். இதனையடுத்து மின் வாரியத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் துபாய் பயணத்தில் முறைகேடு, கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரில் மோசடி என அடுத்தடுத்து பாஜக புகார் தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

உண்மை எதுவென்று தெரியாமல் உளறாதீங்க.. இது உங்க பதவிக்கு அழகு அல்ல.. இபிஎஸ்ஐ பங்கம் செய்த அமைச்சர்.!

கூடுதல் டிஜிபி பணிநீக்கம் செய்ய வேண்டும்

இந்தநிலையில் நேற்று தமிழக ஆளுநரை சந்தித்த அண்ணாமலை, போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாக பணி நீக்கம் செய்து, உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என புகார் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நேற்று மாலை திருச்சி வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பெட்ரோல்,டீசல்,கேஸ் என்பது நமது கையிலோ,நமது  கட்டுப்பாட்டிலோ இல்லை,வெளிநாட்டில் இருந்து வரும் பொருள் என தெரிவித்தார். கேஸ் விலை உயர்வுக்கும்  மத்திய அரசுக்கும் முயற்சி போடுவது முடிச்சு போடுவது என்றால் எந்தவித மனசாட்சி இல்லாத திமுக அரசிடம் நாம் மாட்டிக் கொண்டுள்ளோம் என்பதே உண்மை என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஆட்சி கவிழ்ந்து விடும்

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது திமுக மட்டும் தான், தமிழக அரசின் மெத்தனமான போக்கின் காரணமாகத்தான் மிகப்பெரிய அளவிலான கலவரம் ஏற்பட்டதாக தெரிவித்தார். காவல்துறையில் செயலிழந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.  திமுக அமைச்சர்கள் ஏதோ வண்டி ஓட்டு கொண்டு உள்ளனர் என கூறிய அண்ணாமலை, சொந்த ஊருக்கு கூட அமைச்சர்கள் செல்ல முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநருக்கு எதிராக மேடையில் வீர வசனம் பேசுகிறார். ஆனால் பொன்முடியை சொந்த ஊர் மக்கள் ஊருக்குள் கூட விட மாட்டேன் என்கிறார்கள். இப்படி மோசமான நிலையில் தான் தமிழக ஆட்சி உள்ளதாக தெரிவித்தார்.  இந்த நிலையில் திமுக அரசின் அடுத்த ஊழல் பட்டியலை வெளியிட்டால்  ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார். எனவே பொறுமையாக இருப்போம் நான்கு வருஷம் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் எனவே அதை பார்த்து முடிவு செய்வோம் என அண்ணாமலை தெரிவித்தார்

தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா… அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 516 பேருக்கு தொற்று!!

click me!