சங்கரய்யா உடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டதா என தெரியவில்லை, சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்
சுதந்திர போராட்ட வீரர், முதுபெரும் பொதுவுடைவாதியான சங்கரய்யாவிற்கு ஏற்கனவே தகைசால் தமிழர் விருது கொடுத்து தமிழக அரசு கவுரவித்தது. இதனையடுத்து கவுரவ முனைவர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க திட்டமிட்டது. உயர்கல்வித்துறை கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
undefined
இதற்கான ஒப்புதலை பெற ஆளுநர் ரவிக்கு கோப்புகள் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஒப்புதல் வழங்கவில்லை, இந்த கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநருக்கு இரண்டு முறை கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். ஆனால் இதற்கும் ஆளுநர் ரவி செவிசாய்க்கவில்லையென கூறப்படுகிறது.
பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு
இதனையடுத்து இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நடைபெறுகிறது. இந்த விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 102வது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க மறுப்பதன் காரணம் என்ன?ஆளுநர் ரவி வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் என்பதால், அவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை பார்த்தாலே பிடிக்காது என விமர்சித்தார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் சங்கரய்யா, எனவே சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். சங்கரய்யா உடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியலை தமிழக அரசு அனுப்பியதா என தெரியவில்லை, சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அண்ணாமலைக்கு டப் கொடுக்க அதிமுகவில் இணையும் திருச்சி சூர்யா.?அதிர்ச்சியில் பாஜக நிர்வாகிகள்