ஈரோடு இடைத்தேர்தல்.! அழைப்பு விடுத்த எடப்பாடி.! அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்..! அண்ணாமலை அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 9, 2023, 11:23 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு செல்லும் அண்ணாமலை

தமிழக பாஜகவின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மரங்களை நட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளதாக கூறினார். வெகு விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையில் உள்ள கட்சிகளோடு தமிழக பாஜக நட்பை வளர்த்து வருகிறோம். இலங்கையில் உள்ள தமிழர்களின்  111 படகு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். 

Tap to resize

Latest Videos

பேனா வைக்க 80 கோடி இருக்கு! நெல் மூட்டைகளை வைக்கும் கிடங்குகள் அமைக்க பணமில்லையா.? சீமான் ஆவேசம் !!

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பாஜகவை கலந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி மற்றும் செங்கோட்டையன் அழைப்பு விடுத்ததாக கூறினார். இன்று இலங்கை செல்வதால் பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என கூறினார்.  அதிமுக வேட்பாளர் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றப்படும் என தெரிவித்தவர். இலங்கைக்கு சென்றுவந்த பிறகு ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அங்கும் தேர்தல் பணி உள்ளதாக குறிப்பிட்டார். இருந்தபோதும் ஈரோடு இடைத்தேர்தல் தான் முக்கிய பணி என தெரிவித்தார்.  ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது  ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச ஆரம்பித்ததும் அதிமுகவிற்கு ஓட்டுக்கள் தானாகவே அதிகரிக்கும் என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல்- அண்ணாமலை கருத்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்று எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னீர்கள் இதே போன்ற கருத்தை நாடாளுமன்றத் தேர்தலிலும் வலியுறுத்தியர்களா என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இப்போது எதுவும் சொல்ல முடியாது நாங்கள் சொன்னது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இப்போதைய நேரத்திற்கானது மட்டுமே என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஓய்வு பெறுகிறார் இறையன்பு.! தலைமைசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் மூத்த அதிகாரிகள்.! முன்னனியில் யார் தெரியுமா?
 

click me!