அம்மா எல்லா பதவியும் வழங்கிட்டாங்க!OPS விரும்புவது பதவியல்ல இதுதான்!பூங்குன்றனிடம் வேதனையை பகிர்ந்த ஜெயபிரதீப்

By vinoth kumar  |  First Published Feb 9, 2023, 9:04 AM IST

நமது அம்மா அவர்கள் ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை கூட பொறுப்பை ஐயா அவர்கள் சரியாக செய்யவில்லை என்று திரும்ப பெற்றதாக வரலாறு கிடையாது என்பது 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மாவிடம் பணியாற்றிய தங்களுக்கு நன்றாக தெரியும். 


உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வேதனை தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பூங்குன்றன் தனது முகநூல் பதிவில்;- ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- உங்க ஈகோவை கழட்டி வையுங்கள்!பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள்!யாருக்கு அட்வைஸ் செய்கிறார் ஜெ. நிழல்

இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா?  எவ்வளவோ விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் அவர்கள், நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களது ஆசை என்னவென்று சொன்னால் ஓபிஎஸ் அவர்களிடம் பேசுவதற்கு நான் தயார். கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு என கூறியிருந்தார். 

இந்நிலையில், ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் பூங்குன்றனுக்கு பதிலளித்து வேதனையுடன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தர்மத்தின் படி செயல்படும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பரதனாக விட்டுக் கொடுக்கலாம். ஆனால் தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஒரு சில தலைமை கழக நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க  விட்டுக் கொடுத்ததினால்  கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்சி எவ்வளவு பெரிய பாதாளத்திற்கு சென்று இருக்கிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். 

இதையும் படிங்க;-  இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதன் ஓபிஎஸ்ஐ அரவணைப்பாரா? தென்னரசு வெற்றிக்காக இணைய சொல்லும் பூங்குன்றன்.!

நமது அம்மா அவர்கள் ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை கூட பொறுப்பை ஐயா அவர்கள் சரியாக செய்யவில்லை என்று திரும்ப பெற்றதாக வரலாறு கிடையாது என்பது 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மாவிடம் பணியாற்றிய தங்களுக்கு நன்றாக தெரியும்.  ஐயா அவர்கள்  தனக்கென்று இந்த பதவி வேண்டும் இந்த பொறுப்பு வேண்டும் என்று தான் சார்ந்த தலைமையிடம் கேட்டு நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர் வகித்த பதவிகள் அனைத்தும் அவருடைய உழைப்பு விசுவாசத்தை பார்த்து தானாக வந்தது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். 

உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியில் அல்ல மற்றவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் இருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த பதவியை அம்மா அவர்கள் வழங்கி விட்டார்கள். அவர் விரும்புவது பதவியல்ல கழகம் ஒன்றுபட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான். கழக ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்ற பிறகு அந்தப் பதவியில் அவர் சுதந்திரமாக செயல்பட முடிந்ததா?  எவ்வளவு இடைஞ்சல்கள், குறுக்கீடுகள், சூழ்ச்சிகள், அவமானங்கள், பொய் குற்றச்சாட்டுகள் இருந்தன என்பது தங்களுக்கு நன்றாக தெரியும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ராணுவ கட்டுப்பாட்டு உள்ள கட்சியில் முதன்மை தொண்டராக  பணியாற்றியவர். ஐயா அவர்களிடம் முழு சுதந்திரத்துடன் கட்சியை கொடுத்துப் பாருங்கள்  கழகம் அசுர வளர்ச்சியுடன் முன்னேறுவதை தாங்கள் காண்பீர்கள். கழக வளர்ச்சியே எங்களது லட்சியம் என ஜெய பிரதீப் பதிவிட்டுள்ளார். 

click me!