பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் இறக்கி விடப்பட்டு, புதியவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்- அண்ணாமலை

Published : Nov 23, 2022, 12:19 PM IST
பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் இறக்கி விடப்பட்டு,  புதியவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்- அண்ணாமலை

சுருக்கம்

டிடிவி தினகரன் பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில்,  கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன, எனவே அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது என அண்ணாமலை கூறியுள்ளார்.

டீக்கடையை தொடங்கி வைத்த அண்ணாமலை

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் டீ கடையினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையின் மூன்றாவது கிளையை திறந்து வைத்ததாக தெரிவித்த அவர், தற்போது இருநூறாவது கிளை திறந்து வைத்துள்ளதாக கூறினார். சிறுகுறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு இதுபோன்று சிறிய தொழில்களை தொடங்கி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் நீக்கம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள், சரியாக செயல்படாதவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவர். 

சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு

தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை

கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள்.  முதல் கட்ட  விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்கப்பட உள்ளது.  தவறு செய்தவர்கள் யாரையும் விடப் போவதில்லை.  நாணயத்தின் இரண்டு பக்கமும் உள்ளது.  நாளை இது குறித்து இரண்டு தரப்பும் விசாரணை நடைபெறும் தவறு செய்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்று கருத முடியாது. கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகை தாண்டக்கூடிய அனைவரும் மீதும் தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 

நான் கூட மாற்றப்படலாம்

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான மேற்கொள்ள வேண்டும் என எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படின் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம் அது கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பாடாக தான் இருக்கும் என தெரிவித்தார்.  கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பே புகார்.? அறிவுரை வழங்கிய அண்ணாமலை.! ஆடியோ வெளியானதால் சூர்யா சிவா மீது நடவடிக்கையா ?

டிடிவி தினகரனோடு கூட்டணி

பாஜகவோடு டிடிவி தினகரன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன, அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது என கூறினார்.  தேசிய ஜனநாயக கூட்டணி பொறுத்தவரை அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது.  மேலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக அதற்கான ஒரு சிஸ்டம் செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே  தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குழப்பம்.! மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி- அன்புமணி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!