டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் L.முருகனை திடீரென சந்தித்த விஜயபாஸ்கர்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

Published : Nov 23, 2022, 11:53 AM IST
டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் L.முருகனை திடீரென சந்தித்த விஜயபாஸ்கர்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்

சுருக்கம்

மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென டெல்லியில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென டெல்லியில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பல்லாயிர ஆண்டுகளாக சிந்து சமவெளி நாகரீகம் முதல் இன்று வரை விளையாடப்பட்டு வரும் வீர விளையாட்டு போட்டி ஜல்லிக்கட்டாகும்.  ஒவ்வொரு ஊர்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கான காரணத்தை விஜயபாஸ்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஜல்லிக்கட்டு-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில்;- மாண்புமிகு முன்னாள் முதல்வர்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முருகன்  அவர்களை டெல்லியில் சந்தித்தேன்.  

அச்சந்திப்பில், நம் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து வலியுறுத்தினேன். அன்போடு வரவேற்று, தமிழ் உணர்வோடு உபசரித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும். ஜல்லிக்கட்டு நம் அடையாளம் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!