Palladam Family Murder: பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொலை.! வெட்கமாக இல்லையா முதல்வரே-சீறும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Sep 4, 2023, 6:49 AM IST

வீட்டின் அருகே மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள் அண்ணாமலை, திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


4 பேர் வெட்டி கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வீட்டின் அருகே மது அருந்தியை தட்டி கேட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை பாஜக தலைவர் சகோதரர் திரு.மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

Tap to resize

Latest Videos

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

திரு. மோகன் ராஜ் அவரது தம்பி, அம்மா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?  தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு,

குற்றவாளிகளை கைது செய்திடுக

நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

வீட்டின் அருகே மது அருந்திய மர்ம நபர்கள்.. தட்டி கேட்ட 4 பேர் துடி துடிக்க வெட்டி கொலை...பல்லடத்தில் பரபரப்பு

click me!