பாஜக மூத்த நிர்வாகியின் வீடு மீது தாக்குதல்.! கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்- அண்ணாமலை ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Feb 15, 2023, 11:53 AM IST

பாஜக பட்டியல் அணி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை இந்த இந்த கோழைத்தனமான செயல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் என தெரிவித்துள்ளார்.


பாஜக நிர்வாகி வீடு மீது தாக்குதல்

பா.ஜ.க.வில் பட்டியல் அணி மாநில தலைராக இருப்பவர் தடா பெரியசாமி (வயது 60) பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையை சேர்ந்தவர். நேற்று இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த மர்ம கும்பல், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைத்தும், தடா பெரியசாமியின் காரையும் சேதப்படுத்தி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பா.ஜ.க.வினர் தடா பெரியசாமியின் வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Latest Videos

ஓபிஎஸ் உடன் பேச்சு.! ஈரோட்டில் என்ன நடக்குது? திருப்பி அடித்தால் அடிப்போம்.! திமுகவை இறங்கி அடித்த அண்ணாமலை

போலீசார் குவிப்பு

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் பாஜக நிர்வாகி வீடு மீது தாக்குதல் நடத்தியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று இரவு பாஜக SC அணி மாநிலத் தலைவர் திரு தடா.பெரியசாமி அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

நேற்று இரவு, SC அணி மாநிலத் தலைவர் திரு அவர்கள் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.

சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. (1/3)

— K.Annamalai (@annamalai_k)

 

இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்

சமூக விரோதிகளின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தடா.பெரியசாமி போன்ற உண்மையான சமூக நீதிக்கு உழைக்கும் பாஜக தலைவர்களின் செயல்பாடுகள், போலி சமூக நீதி பேசிக் கொண்டிருப்பவர்களை எந்த அளவுக்கு அச்சுறுத்தியிருக்கிறது என்பது இது போன்ற நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. ஏழை எளிய மக்களுக்கான எங்கள் பணிகளை, இது போன்ற கோழைத்தனமான செயல்களால் தடுக்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பதுங்கி இருந்து பாயப்போகும் ஓபிஎஸ்.? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு..! காரணம் என்ன.?

click me!