பதுங்கி இருந்து பாயப்போகும் ஓபிஎஸ்.? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு..! காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Feb 15, 2023, 11:05 AM IST

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணியின் வேட்பாளரான தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் அணி, தேர்தலில் பிரச்சாரத்திற்கு செல்லாமல் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது வருகிற 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 


அதிமுகவின் ஆதிகார மோதல்கள்

அதிமுகவிற் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என 4 பிரிவாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுகள் பிரிந்து தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.  இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணி சார்பாக தென்னரசும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணி சார்பாக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்புக்கும் கிடைக்காமல் முடங்கும் நிலை ஏற்பட்டது.

Latest Videos

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரை நிறுத்த அறிவுறுத்தியது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு இபிஎஸ் அணியின் ஆதரவு வேட்பாளர் தென்னரசை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஓபிஎஸ் உடன் பேச்சு.! ஈரோட்டில் என்ன நடக்குது? திருப்பி அடித்தால் அடிப்போம்.! திமுகவை இறங்கி அடித்த அண்ணாமலை

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

தென்னரசுவிற்கு ஓபிஎஸ் அணியும் ஆதரவு தெரிவித்து இருந்தது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை சின்னத்திற்கு வாக்கு கேட்போம் என கூறியிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் எடப்பாடி அணி கொடுத்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கியது. ஓ.பன்னீர் செல்வத்தின் அணிக்கு அனுமதி மறுத்து இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20 ஆம் தேதி அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தலையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதும், ஈரோடு தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு இபிஎஸ் அணி அழைப்பு விடுக்கப்படாதது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பொறுமைக்கும் எல்லை உண்டு.. ஆளுநர் மக்கள் எதிர்ப்பு நெருப்புடன் விளையாடாதீர்.. எச்சரிக்கும் கி.வீரமணி..!

click me!