எங்கிருந்து இந்த தகவல் பரவியது என்று எனக்கு தெரியவில்லை... பிரதமர் தமிழக வருகை குறித்து அண்ணாமலை விளக்கம்!!

By Narendran SFirst Published Oct 13, 2022, 11:40 PM IST
Highlights

பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனிடையே தேவர் ஜெயந்திக்காக பிரதமர் நரேந்திர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் பரவின. ஆனால் இதனை பாஜக முற்றிலும் மறுத்துள்ளது. பொதுவாக பிரதமர் மோடியின் பயணம் குறித்து உடனடியாக முடிவு செய்வது அல்ல.

இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு பெற்று தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே.?? டார் டாரா கிழிக்கும் எடப்பாடியார்.

இந்த நிலையில் வரும் 30 ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் பரவியது உண்மையில் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழகம் வருவதாக வெளியான தகவல் எங்கிருந்து பரவியதென்று தனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா.? திராவிட மாடலை தூக்கி போட்டு மிதிக்கும் மக்கள் நீதி மய்யம்.

இதுக்குறித்து பேசிய அவர், பிரதமரின் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்படும். அப்படியிருக்க வரும் 30 ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் எங்கிருந்து பரவியதென்று எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தேவர் ஜெயந்தியில் வைத்து பிரதமர் மோடி அறிவிப்பதாக வெளியான தகவலும் பொய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!