திருவள்ளுவருக்கு நெற்றியில் விபூதி பட்டை, காவி உடை.! வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை..! விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By Ajmal KhanFirst Published Jan 16, 2023, 10:33 AM IST
Highlights

திருவள்ளுவர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, திருவள்ளுவருக்கு காவி உடையும், ருத்திராட்சம் அணிவித்ததை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் தினம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிய அய்யன் திருவள்ளுவர் தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து  திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கி, "வள்ளலார் பல்லுயிர்  காப்பகங்கள்" திட்டத்தின் கீழ் ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.

ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. திமுகவில் இருந்து நீக்கம்!! துரைமுருகன் அதிரடி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இதேப்போல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார்  பெரும்புகழ் போற்றி போற்றி! என பதிவிட்டுள்ளார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன்

திருவள்ளுவப் பெருமகனார்

பெரும்புகழ் போற்றி போற்றி! pic.twitter.com/0wZVRXGOvF

— சீமான் (@SeemanOfficial)

திருவள்ளுவரைப் போற்றுவோம்-சீமான் வாழ்த்து

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.

சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம்.

அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/Prlf6BIfym

— K.Annamalai (@annamalai_k)

 

இந்தநிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடையும், நெற்றியில் விபூதி பட்டையும், ருத்திராட்சம்  அணிவித்து இருப்பது போல் வெளியிட்டுள்ள படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையில் டுவிட்டருக்கு சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..! மீன், இறைச்சி வாங்க போட்டி போட்ட பொதுமக்கள்

click me!