அண்ணா அறிவாலயத்துக்கு விரைவில் உருது பெயர்... நடிகர் ராதாரவி ஆவேசம்!

By Asianet TamilFirst Published Feb 28, 2020, 10:26 PM IST
Highlights

“நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் அந்நியர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களைக் கண்டறியவே குடியுரிமைச் சட்டம் தேவை. ஆனால், இஸ்லாமியர்களைப் பயன்படுத்தி திமுக இதில் அரசியல் செய்கிறது. சிஏஏ-வை ஏன் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார்?" 

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு உருது மொழியில் பெயர் வைக்கும் சூழல் ஏற்படும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக சார்பில் ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்த அடிப்படையில்  தமிழகத்தில் ஆதரவு பேரணி இன்று பல நகரங்களில் நடைபெற்றது. சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜக சார்பில் இன்று மாலை பேரணி நடைபெற்றது. தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற பாஜக தொண்டர்களை சேப்பாக்கம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.


அப்போது தொண்டர்கள் மத்தியில் நடிகர் ராதாரவி பேசினார். “நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் அந்நியர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களைக் கண்டறியவே குடியுரிமைச் சட்டம் தேவை. ஆனால், இஸ்லாமியர்களைப் பயன்படுத்தி திமுக இதில் அரசியல் செய்கிறது. சிஏஏ-வை ஏன் தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார்? இப்படியே ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தால், விரைவில் அண்ணா அறிவாலயத்தில் தமிழை எடுத்துவிட்டு உருது மொழியில் பெயரை வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.” என்று ராதாரவி பேசினார்.

click me!