நைட் வேண்டாம்… ஏசியை போடாதீங்க…. மக்களுக்கு அரசு தந்த அட்வைஸ்..

By manimegalai aFirst Published Oct 10, 2021, 8:38 PM IST
Highlights

ஏசியை யூஸ் பண்ண வேண்டாம் என்று மக்களை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏசியை யூஸ் பண்ண வேண்டாம் என்று மக்களை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 135 மின் ஆலைகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் மின்தேவையை இவை தான் பூர்த்தி செய்கின்றன.

இந்த ஆலைகளில் 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பதால் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மின்தடையால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந் நிலையில் ஆந்திர மாநிலத்தின் எரிசக்தி துறை செயலாளர் ஸ்ரீகாந்த் நகுலபள்ளி ஒரு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக மின் நுகர்வு குறைத்து கொள்ள வேண்டும்.

பீக் அவர்ஸ் எனப்படும் காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்நுகர்வு அதிகமாக இருக்கும். அப்போது அனைவரும் ஏசியை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் 10 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கலாம். மின்வெட்டையும் நாம் தவிர்க்கலாம் என்று கூறி இருக்கிறார்.

click me!